Friday, December 5, 2008

சமீபத்தில் படித்து சிந்தித்தது

சர்ச்சுக்கு பிரார்த்தனை செய்ய வரும் ஒரு முதியவரிடம் பாதிரியார் கேட்கிறார், "பிரார்த்தனை நேரத்தில், நீங்கள் வாய் திறந்து முணுமுணுத்துக் கூடப் பார்த்ததில்லை, பின் எதற்காக வருகிறீர்கள்?""நான் கடவுளீடம் பேச வரவில்லை. அவர் சொல்வதைக் கவனிக்க வருகிறேன்."ஓ, கடவுள் உங்க காதில் மட்டும் பேசுகிறாராக்கும்? அப்படி என்ன தான் சொல்கிறார்?""அவரும் என்னைப் போல்தான், பேசவருவதில்லை, கவனிக்கத்தான் வருகிறார்!"வாழ்க்கை அப்படித்தான்,வேறு லயத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அமைதியாக, உன்னிப்பாகக் கவனித்தால் போதும்.. நீங்கள் விரும்பியதெல்லாம் எங்கே இருக்கிறது என்பது புலப்படும்.கடவுள் சன்னிதியில் சொல்வது மட்டும் தான் பிரார்த்தனை என்பது அல்ல; இந்த உலகமே, இந்தப் பிரபஞ்சமே இறைவனின் ஆலயம். எனவே, நடப்பதை, உணவு உட்கொள்வதை, அடுத்தவரிடம் அன்பு காட்டுவதை என் ஒவ்வொரு செயலையுமே பிரார்த்தனை போல் செய்யுங்கள்!"வாழ்க்கையே பிரார்த்தனை போல் நடத்திச் செலவது தான் என் நோக்கம். அதற்கொரு பயிற்சியாக கோயிலிலும் பிரார்த்தனை செய்கிறேன்" இதை வாழ்க்கையின் ஆழமான அனுபவமாக ஏற்றுப் பாருங்கள். அதன் பலனாக உங்களுக்கு அமுதம் கிடைக்கும்.

No comments:

Post a Comment