Wednesday, October 28, 2009

இறை… Is HE there? Where is HE?“

.….…. ” ஒரு தாய் குழந்தையை எத்தனை வாஞ்சையோடு அழைப்பாளோ… எத்தனை உரிமையோடு அழைப்பாளோ… எப்படி அலுக்காமல் அழைப்பாளோ…அத்தனை அக்கறையோடு இறையை நாம் அழைக்க வேண்டும். ”
குமரகுருபரர் சொன்னது மன்னருக்கு புரிந்தது.
இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இறைவழிபாடு என்பது தனித்த ஒரு செயல் அல்ல.நாம் எல்லாச் செயலிலும் இறைவழிபாடு இருக்கிறது.
குழந்தையைக் கொஞ்சுவது, நண்பனோடு பழகுவது, மனைவியோடு கூடுவது, தாய் தந்தையரைவணங்குவது, குருவுக்கு அடிபணிவது, வறியவருக்கு வாரிக் கொடுப்பது போன்ற எல்லாவற்றிலும் நாம் இறையைக் காணலாம்.
இறை என்பது வெட்ட வெளியல்ல. ஒன்றுமில்லா சூன்யம் அல்ல, திகைத்துப் போய் நிற்பதல்ல.இசைபட வாழ்தல்தான் இறையுணர்வு. திகைப்பிலிருந்து மீண்டு, எல்லார் மீதும் அன்பு பொங்கப் பொங்க வாழ்தல்தான் இறையுணர்வு.
இறை எங்குமிருப்பவர். எங்குமிருப்பது. உருவம் இல்லாதும், இருக்கும் உருவத்தோடும் இருக்கும். இறைவன் எங்கும் இருப்பதை ஏற்றுக் கொண்டால், உருவத்தையும் ஏ ற்றுக் கொள்ளவேண்டும். உருவமாயிருப்பதில் இறைவன் இல்லையென்று சொல்வது மூடத்தனம்.
இதிலிருந்து உயிரற்ற கல்லிலும், உயிருள்ள பொருளிலும் அன்புள்ளவர் இறைவனை காண முடியும். நேசிப்புத்தான் முக்கியம்.எதை என்பது முக்கியமல்ல. எல்லாவற்றையும் என்பதுதான் முக்கியம். பகுத்துக் கொண்டு இருப்பது அல்ல.
நேசிக்கத் தெரியாதவர்கள்தான் இங்கெய் இறைவன் இல்லை என்று சொல்கிறார்கள். இவர் இறைவனில்லை என்று சொல்கிறார்கள். தனக்கு தெரியும் என்று அலட்டிக் கொள்பவர்களால் இறையைக் கண்டு கொள்ள முடியாது. இழிவுதான் செய்ய முடியும்.
அன்பு செய்தலுக்கு முற்றிலும் எதிரான விஷயம் இழிவு செய்தல். இழிவு செய்வொரிடம் இறையுணர்வு இருக்காது.
‘ இந்த தூணில் இறைவன் இருக்கிறானா..?’ என்று இரணியன் இழிவு செய்தான். ஒரு சிறு பாலகனிடம் இடுப்பில் கை வைத்து கர்ஜித்தான். பாலகன் இருக்கிறான் என்று சொன்னதும் இல்லை என்று தூணை உடைத்தான். அணுவைபிளந்தது போல செக்கச் செவேலென்று சிங்கம் வெளிவந்தது.
அணுவை பிளந்தால் சக்தி வெளிப்படும் எனில், தூணைப் பிளந்தால் வெளிப்படாதா, தூனிலிருந்து மிகப்பெரும் சக்தி வெளிப்பட்டது.
எதற்குச் சொல்கிறேன்… இறை உண்டு. எங்கும் உண்டு. எல்லா உயிரிலும் உண்டு. எல்லா ரூபத்திலும் உண்டு. பார்க்க நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான பக்குவம்வளர்த்துக் கொள்ளவேண்டும். அமைதிதான் அதற்கான பக்குவம்.”
குமரகுருபரர் பேச்சுத் தமிழில் கணீரென்று சொல்ல அங்குள்ள எல்லோருக்கும் புரிந்தது. மன்னர் திருமலை நாயக்கரும், ராமப்பையரும் உட்பட எல்லோரும் குமரகுருபரரை நோக்கி கைக்கூப்பினார்கள். அந்த குழந்தையும் கைக்கூப்பிற்று. அந்த குழந்தை எழுந்து வந்து மன்னரை நோக்கி வணங்கியது.
” இறைவன் எல்லா ரூபத்திலும் இருக்கிறான். நீங்கள் கூட இறைவன் தான்.” கைக்கூப்பி சிரம் தாழ்த்தி வணங்கியது.
” ஆமாம் அம்மா, நீ கூட இறைவிதான் ” மன்னரும் சிரம் தாழ்த்தி கைக்கூப்பி வணங்கினார்.
எல்லோரும், எல்லோரையும் வணங்கினார்கள். மன்னரின் பட்டமகிஷி பாண்டிமாதேவியைப்பார்த்து கைக்கூப்பி வணங்கினாள். அந்த இடமே மாறிப்போயிற்று. அன்பு, தென்றல் போல் மாளிகையில் தவழ்ந்தது. எல்லார் மனதையும் வருடியது. எல்லோரையும் அனைத்துக் கொண்டது. குளிர்வித்தது.குமரகுருபரர் ஒவ்வொருவர் மனததுக்குள்ளும் இருக்கிற கர்வக் கிழங்கை அகழ்ந்து யெடுத்து வெளியேஎறிந்தார். கனத்துக் கொண்டிருந்த கர்வம் வெளியே போனதும் உம்மென்றிருந்த முகங்களெல்லாம் மலரச்சிரித்தன.….…. ”
: பால குமாரனின் ” சிம்மாசனம்” நூலிலிருந்து....

No comments:

Post a Comment